📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 29 ஜூலை, 2026

சொற்புணர்ச்சி என்றால் என்ன?

புணர்ச்சி என்றால் இரண்டு சொற்கள்  பொருள் மாறாற வகையில் ஒன்றோடொன்று சேர்வதையே இலக்கணத்தில் புணர்ச்சி என்கிறோம்.

  • நிலைமொழி: முதலில் இருக்கும் சொல்.

  • வருமொழி: வந்து சேரும் சொல்.

நிலைமொழியின் ஈறும் (கடைசி எழுத்து), வருமொழியின் முதலும் (முதல் எழுத்து) இணைவதே புணர்ச்சி ஆகும்.

உதாரணம்:

தமிழ் + அமுது = தமிழமுது

(தமிழ் - நிலைமொழி | அமுது - வருமொழி)

1. எழுத்துகளின் அடிப்படையில் புணர்ச்சி

நிலைமொழியின் கடைசி எழுத்து மற்றும் வருமொழியின் முதல் எழுத்து அமைவதைப் பொறுத்து புணர்ச்சி 4 வகைப்படும்:

புணர்ச்சி வகைநிலைமொழி ஈறுவருமொழி முதல்உதாரணம்
உயிர்முன் உயிர்உயிர் எழுத்துஉயிர் எழுத்துமணி + அடித்தது = மணியடித்தது
உயிர்முன் மெய்உயிர் எழுத்துமெய் எழுத்துபலா + கனி = பலாக்கனி
மெய்ம்முன் உயிர்மெய் எழுத்துஉயிர் எழுத்துதமிழ் + அமுது = தமிழமுது
மெய்ம்முன் மெய்மெய் எழுத்துமெய் எழுத்துதமிழ் + தாய் = தமிழ்த்தாய்

2. மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சி

சொற்கள் புணரும்போது ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சியை இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்:

1. இயல்புப் புணர்ச்சி

நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது எந்தவிதமான எழுத்து மாற்றமும் (தோன்றுதல், திரிதல், கெடுதல்) இன்றி இயல்பாகப் புணர்வது இயல்புப் புணர்ச்சி எனப்படும்.

  • வாழை + மரம் = வாழைமரம்

  • தாய் + மொழி = தாய்மொழி

  • சுடர் + தமிழ் = சுடர்தமிழ்

மெய்யெழுத்தின் மீது உயிர் எழுத்து சேர்ந்து வருவதும் இயல்புப் புணர்ச்சியாகும்.

  • பால் + ஆறு = பாலாறு  (ல்+ஆ = லா)

  • கடல் + அலை = கடலலை (ல் + அ = ல)



2. விகாரப் புணர்ச்சி

இரண்டு சொற்கள் சேரும்போது எழுத்துகளில் மாற்றம் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். இது 3 வகைப்படும்:

⁠1. தோன்றல் விகாரம்

இரண்டு சொற்கள் சேரும்போது இடையில் ஒரு புதிய எழுத்து தோன்றுவது.

  • தமிழ் + தாய் = தமிழ்த்தாய் ( 'த்' என்ற எழுத்து தோன்றியது)

  • பூ + கொடி = பூக்கொடி ( 'க்' என்ற எழுத்து தோன்றியது)

⁠2. திரிதல் விகாரம்

ஒரு எழுத்து வேறொரு எழுத்தாக மாறுவது (திரிவது).

  • வில் + கொடி = விற்கொடி ( 'ல்' என்பது 'ற்' ஆகத் திரிந்தது)

  • மண் + குடம் = மட்குடம் ( 'ண்' என்பது 'ட்' ஆகத் திரிந்தது)

⁠3. கெடுதல் விகாரம்

புணரும்போது நிலைமொழியில் உள்ள ஒரு எழுத்து மறைந்து (கெட்டு) போவது.

  • மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி ( 'ம்' என்ற எழுத்து மறைந்தது)

  • மரம் + வேர் = மரவேர் ( 'ம்' என்ற எழுத்து மறைந்தது)


நினைவில் கொள்ள எளிய வழி:

  • மாற்றம் இல்லை என்றால் ➔ இயல்புப் புணர்ச்சி

  • புதிய எழுத்து வந்தால் ➔ தோன்றல் விகாரம்

  • எழுத்து மாறினால் ➔ திரிதல் விகாரம்

  • எழுத்து மறைந்தால் ➔ கெடுதல் விகாரம்

இத்தோடு இணைக்கப்பட்டுள்ள பீரீஎப் இலுள்ள  சொற்களைப் புணர்த்துக. 

இந்தக் கட்டுரையையும் பார்க்கவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days