எனது அன்புத் தமிழ் 'தமிழ்ச்சுடர்' உறவுகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும். வணக்கம்!
நான் நேசிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியர்களில் ஒருவர் திருமிகு. றபீக் மொஹிதீன் ஆசிரியர் அவர்கள்.
எனது அன்புத் தமிழ் 'தமிழ்ச்சுடர்' உறவுகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும். வணக்கம்!
நான் நேசிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியர்களில் ஒருவர் திருமிகு. றபீக் மொஹிதீன் ஆசிரியர் அவர்கள்.
மனிதனிடம் எதையும் சிந்திக்கும் சிந்தனா சக்தி உண்டு. பகுத்தறிவற்ற விலங்கினங்களுக்கு அந்த சக்தி இல்லை. இது கடவுள் நியதி. மனிதன் பாரில் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுடைய சிந்தனா சக்தி காலத்திற்குக் காலம் வளர்பிறை போல் வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த சிந்தனா சக்தியின் மேன்மையிற்றான் இன்று றஷியர்கள் சந்திர மண்டலத்தில் கூட தங்கள் நாட்டின் சின்னத்தைப் பொறித்துள்ளார்கள்.
தமிழின் வரலாற்றுச் சுவடுகளில் மின்னும் பொற்காலம் “சங்க காலம்” எனப்படும். தமிழர் பண்பாட்டின் பூர்வீக ஒளியாகவும், இலக்கியச் செல்வத்தின் மூலாதாரமாகவும் சங்க யுகம் விளங்குகிறது. இக்காலம் கிட்டத்தட்ட கிமு 500 முதல் கிபி 300 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக புலவர்கள் கருதுகின்றனர். மொழி, இலக்கியம், அரசியல், சமூகம், பண்பாடு, தத்துவம் – எல்லா துறைகளிலும் சங்க காலம் தமிழர்களின் தனித்துவத்தையும் உயர்வையும் பறைசாற்றுகிறது.
மாணாக்கர்களுக்கும், தமிழன்புள்ளோர் மனதுக்கும் நெருக்கமாக இருப்பது போன்ற முறையில், பாரதிதாசனின் 'புத்தகசாலை' என்னும் கவிதையை இங்கு விரிவாக நம் பார்வைக்கு எடுத்துரைக்கப்போகிகிறேன்.
தமிழ்மொழி சார்ந்த ஆக்க இலக்கியங்களை எனது பாணியில் – எனது சிந்தனைகளை கலந்தழகு செய்து வழங்கி தமிழுக்கு அணிசெய்து வருவேன். தொடருங்கள், தமிழின் ஒளிக்கதிர்கள் உங்கள் உள்ளத்தில் பரவட்டும்!
- தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்
தனித்தமைந்த வீட்டிற் புத்தகமும் நானும்
சையோகம் புரிந்ததொரு வேளைதன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!
தரம் 2 மாணவர்களுக்காக நீர்கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட, தமிழ்மொழி சார்ந்த விசேட செயற்றிட்டம் இது.
மாணவர்கள் கூடுதலான பயிற்சிகள் செய்து, தங்களைத் தரப்படுத்திக் கொள்ள இச்செயற்றிட்டம் (வினாப்பத்திரங்கள்) உதவும் என்பதில் சந்தேகமில்லை.
தரம் 10 - 11 மாணாக்கருக்கான தமிழ் இலக்கியத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள பாட அலகுகளுக்கான காணொளிகளை கீழ்வரும் இணைப்புகளினூடாகக் காண முடியும்.
இந்த தமிழ்ச்சுடர் யூரியுப் தளத்திற்குச் சென்று, அந்தக் காணௌிகளைப் பார்ப்பதோடு, தளத்தை 'ஸப்ஸ்கிரைப்' செய்வதற்கும் மறக்க வேண்டாம்.
பாடங்கள்
----------------
வினாப்பத்திரத்தைத் தரவிறக்குவதற்கு
தொடர்மொழிக்கு ஒரு மொழிபற்றி அறிந்து கொள்வதற்காக இந்த இணைப்பில் அழுத்தவும்.
வழக்கமாக தனது பிள்ளைகளின் கல்வி விவகாரங்கள் தொடர்பாக என்னிடம் ஆலோசனை கேட்கும் ஓர் இளம் தாய், எனக்கு அழைப்பு எடுத்திருந்தார்.
"ஸல்மா இப்போ நாலாம் வகுப்பு படிக்கிறா. அடுத்த வருஷம் ஸ்கொலர்ஷிப் பரீட்சை எழுத வேணுமே. ஆனால் அவ ஸ்கூல் விட்டு வந்து சாப்பிட்டதும் தூங்கப் பார்க்கிறா. டியூஷன் வகுப்புக்குப் போக முடியாது என அடம் பிடிக்கிறா. இது தினமும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது" என்றார் அந்தப் பெண்.
"அவ சின்னப் பிள்ளை. அவக்கு ஓய்வும் வேண்டுமே. அவ நன்றாக படிக்கிறா தானே. ஏன் இப்படி வற்புறுத்தி இந்த நேரத்தில் டியூஷன் வகுப்புக்கு அனுப்புறீங்க?" என்று கேட்டேன்.
Word: Compassion
Meaning (தமிழில்): இரக்கம்
Example: Show compassion to the poor.
உதாரணம்: ஏழைகளுக்கு இரக்கம் காட்ட வேண்டும்.
| ஆண்டு | விழா பெயர் |
|---|---|
| முதல் ஆண்டு | காகித விழா |
| இரண்டாம் ஆண்டு | பருத்தி விழா |
| மூன்றாம் ஆண்டு | தோல் விழா |
| நான்காம் ஆண்டு | மலர், பழ விழா |
| ஐந்தாம் ஆண்டு | மர விழா |
| ஆறாம் ஆண்டு | சர்க்கரை, கற்கண்டு விழா |
| ஏழாம் ஆண்டு | கம்பளி, செம்பு விழா |
| எட்டாம் ஆண்டு | வெண்கல விழா |
| ஒன்பதாம் ஆண்டு | மண்கலச விழா |
| பத்தாம் ஆண்டு | தகரம், அலுமினியம் விழா |
| பதினோறாம் ஆண்டு | இரும்பு விழா |
| பன்னிரண்டாம் ஆண்டு | லினன் விழா |
| பதிமூன்றாம் ஆண்டு | மின்னல் விழா |
| பதினான்காம் ஆண்டு | தந்த விழா |
| பதினைந்தாம் ஆண்டு | படிக விழா |
இங்கு தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு, மற்றும் தமிழரின் உலகளாவிய விஷயங்களைத் தொடுவதற்கான அறிவுப் புதிர்கள் தொகுக்கப்படுகின்றன. தினமும் புதுப்பிக்கப்படும்!
தொடர்ந்து புதுப்பிக்கப்படும்... மேலும் பகுதியுடன் விரைவில் சந்திப்போம்!
- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
தமிழும் ஆங்கிலமும் – கல்வியின் இரு கண்கள்!
தாய்மொழி மரபு | ஆங்கிலம் உலகத்தோடு இணைப்பு – இரண்டுக்கும் இடம் வேண்டும்!
இன்றைய உலகில் ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி என்ற நிலையைப் பெற்றிருக்கிறது. தொழில், அறிவியல், மருத்துவம், கணினி போன்ற அனைத்து துறைகளிலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் மிகுந்தது. அதனால், ஆங்கிலம் கற்றல் என்பது காலத்தால் விதிக்கப்படும் அவசியம். ஆனால், இதன் பொருட்டு தாய்மொழியாம் தமிழை புறக்கணிப்பது என்பது தாய்ப்பாலை மறப்பதற்குச் சமமான பிழை என்பதை உணர்வது அவசியகும்.
சில சர்வதேச பாடசாலைகள் அல்லது பிரபல தனியார் பாடசாலைகளில், தமிழ்மொழி பேசும் மாணவர்களுக்கு கூட தண்டனை வழங்கப்படுவது கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும். “Speak in English only” என்ற அறிவிப்புகள், மாணவர்களின் தாய்மொழிப் பாவனைக்கு தடையாகவே அமைகின்றன.
1. குறைநிரப்பு பிரேரணை (Supplementary Budget) என்பது, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில், எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் ஏற்படும் போது அல்லது புதிய செலவினங்கள் தேவைப்படும்போது, அவற்றை ஈடுசெய்ய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை ஆகும்.
2. மிகை ஊதியம் என்பது ஒரு ஊழியருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விட அதிகமாக வழங்கப்படும் தொகை அல்லது சலுகையைக் குறிக்கும். இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் அல்லது ஒரு சிறப்பு நிகழ்வின் காரணமாக வழங்கப்படும். உதாரணமாக, ஒரு மேலதிக வேலை நேரம் அல்லது சிறப்பு செயல்திறனுக்காக வழங்கப்படும் ஊதியம் மிகை ஊதியமாகக் கருதப்படலாம்.