தமிழ் மொழியும் இலக்கியமும் - தரம் 6 இற்குரிய பாடப் பரப்பில் 20 பாட அலகாக அமைந்துள்ள, 'கம்பரிற் பாலர் கல்வி' எனும் பாடப்பகுதியில் அமைந்துள்ள பாடல்களுக்கான விளக்கமும், அப் பகுதியிலிருந்து எடுக்கத் தக்க வினாக்களும் - விடைகளும் இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றன.
பாடல் 1
ஈரமொ டுரைதரும் முனிவர ரிடைபோய்
சோர்பொழு துதனிநகர் துறுகுவர் எதிர்வர்'
பொருள்
வீரனாகிய இராமனும் அவனது இளைய தம்பிகளும்கூட சோலைகள் நிறைந்த அழகிய காட்டின் நடுவே வசிக்கும், அன்பும் கருணையும் பொழியும் முனிவர்களிடமிருந்து கல்வி கற்றுவிட்டு, மாலையில் தனியான நகரத்தை நோக்கித் திரும்புவார்கள். அப்போது வழியில் உள்ள மக்கள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்பார்கள்.
பாடல் 2
'கார்வர அலர்பயிர் பொருவுவர் களியால்'
பொருள்
கார்காலம் (மழைக்காலம்) வரும்போது மகிழ்ச்சியால் தழைத்து மகிழும் நெற்பயிர்களைப் போல, இராமனைக் கண்டதும் நகர மக்களின் அகமும் முகமும் மலர்ந்து பெருமகிழ்ச்சி அடைவார்கள்.
பாடல் 3
'எதிர்வரும் அவர்களை எமையுடை யிறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஔிரா
எதுவினை இடநிலை இனிதுனும் மனையும்
மதிதரு குமரரும் வலியர்கொள் எனவே'
பொருள்
நம்மை ஆளும் இறைவன் இராமன் முதிர்ந்த கருணையோடு முகம் மலர்ந்து ஔிர, 'வீட்டு விவகாரங்கள் எப்படி? குடும்பம் செழிப்பாக இருக்கின்றதா? உங்களது புதல்வர்கள் கல்வியிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்குகிறார்களா?' என்று அன்போடு நலம் விசாரிப்பான்.
பாடல் 4
'அஃதைய நினைஎம தரசென உடையேம்
இஃதொரு பொருளல எமதுயி ருடன்ஏழ்
மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன்
உருபகல் அளவென உரைநனி பகர்வார்'
பொருள்
'அப்பனே, நீர்தான் எங்கள் அரசன்; எங்களுக்கு என்ன குறை?; நாங்கள் ஏழு உலகங்களையும் உமது பாதங்களுக்கே அர்ப்பணிக்கிறோம். கற்பக காலம் வரை நீ எங்களை ஆண்டு அரசு புரிய வேண்டும்' (என்று மக்கள் இராமனை வாழ்த்துவர்.)
பாடல் 5
'ஏழையர் அனைவரும் அவர்தட முலைதோய்
கேழ்கிளர் மதுகையர் கிளைகளும் இளையார்
வாழிய என அவர் மனன்உறு கடவுட்
டாழ்குவர் கௌசலை தயரதன் எனவே'
பொருள்
பெண்கள், ஆண்கள் யாவரும் 'இந்த அரச இராமக் குழந்தைகள் நீண்ட காலம் வாழ வேண்டும்; நமது குல தெய்வங்கள் திருவருள் பொழிய வேண்டும்' என்று கௌசலை (கோசலை), தயரதன் (தசரதன்) ஆகியோரைப் போல மனம் உருகிப் பிரார்த்தனை செய்வார்கள்.
(தொடரும்...)
#தரம்6
#தமிழ்மொழியும்_இலக்கியமும்
#கலைமகன்_பைரூஸ்
#சுடர்தமிழ்
#வினாக்களும்_விடைகளும்
#மூன்றாம்_தவணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days